மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் குழந்தைகள் தின விழா
பல்லாவரம், 
சென்னை அடுத்த பல்லாவரத்தில் டி.எம்.ஐ காஞ்சிபுரம் மாவட்ட
பெண்கள் கூட்டமைப்பு, குழந்தைகள் பாரளுமன்றம் இணைந்து
குழந்தைகள் தின விழா தனியார் மண்டபத்தில் வெகுவிமர்சியாக கொண்டாடபட்டது.
இன்றைய குழந்தைகள் நாளைய நம் காவலர்கள் என்ற மைய கருத்தின் அடிப்படையில்
குழந்தைகள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி
சிறப்பு அழைப்பாளராக காலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.எம்.ஐ. குழந்தைகள் பாராளுமன்றம் சார்ந்த 600-க்கும் மேற்பட்ட
குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொண்டடு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இதில் டி.எம்.ஐ.சமூக பணி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ரெஞ்சிஸ்மேரி,
காவல்துறை உதவி ஆணையாளர் தேவராஜ்,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்குமரன்,
அரசு பொதுமருத்துவமனை மருத்துவர் சத்தியபிரியா,
காஞ்சிபுரம் டி.எம்.ஐ அருட் சகோதரிகள் மற்றும் களபணியாளர்கள் உட்பட ஏராளமனோர்
கலந்துகொண்டனர். ,