நீங்க Jio பயனரா? அப்போ Google Pay & PhonePe-வை அன்இன்ஸ்டால் பண்ணிடுங்க! ஏனென்றால்

சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது, ஏனெனில் ஜியோ நிறுவனத்திடம் மொத்தம் 370 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இருப்பினும் கூட ஜியோ தனது வளர்ச்சியை நிறுத்துவதாய் இல்லை.


சத்தம் போடாமல் களமிறங்கிய ஜியோ யுபிஐ (Jio UPI) சேவை


ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கான மற்றொரு சேவையை அறிமுகம் செய்துள்ளது, அது ஜியோ யுபிஐ (Jio UPI) சேவை ஆகும். அதாவது ஜியோ நிறுவனம் தனது JioMoney ஆப்பில் யுபிஐ அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது ஜியோ சந்தாதாரர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆக நீங்களொரு ஜியோ பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் போன்பே அல்லது கூகுள் பே போன்ற பணப்பரிமாற்ற ஆப்ஸ்கள் இருப்பின், அதை அன்இன்ஸ்டால் செய்ய நேரிடலாம்.