ஆடியின் மிகவும் ஆடம்பரமான ஏ8எல் கார் விற்பனைக்கு அறிமுகம்..

நிறுவனம் புதிய தலைமுறை ஏ8எல் காரை ரூ. 1.56 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் இந்த காருக்கான புக்கிங் துவங்கப்பட்ட நிலையில், இதனுடைய சோதனை ஓட்டம் இந்தியாவில் சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வந்தது.


இந்தியாவில் ஏ8 கார் லாங் வீல்பேஸ் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் உள்ளன.

புதிய நான்காம் தலைமுறை ஆடி ஏ8எல் காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜிடு வி6 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. எட்டு ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வாரி வழங்கும்.