மிகவும் உறுதியான, சிறப்பான செயல்திறன் வெளிப்படுத்தக்கூடிய ஐ.என். கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம். இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
ஸ்கோடா காமிக் காரை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ஐ.என். கான்செப்ட் எஸ்யூவி காரை, 2020 ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்.
இந்த புதிய ஐ.என். கான்செப்ட் காருக்கான தயாரிப்பு நிலை மாடல், இந்தாண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும் எஸ்யூவி கார்களில், அதிக விலை கொண்ட மாடலாக ஐ.என். கான்செப்ட் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது.
ஸ்கோடாவின் இந்த புதிய எஸ்யூவி கார், இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட நாட்டில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் விற்பனையாகி வரும் அனைத்து மாடல்களுக்கும் சரிநிகர் போட்டியாக அமையவுள்ளது.